×

மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா வருமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே நிலையத்தில் சிறுவர் பூங்காவை மீண்டும் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு தங்கும் அறைகள் உள்ள நிலையில் தொலைதூரம் செல்ல குறிப்பிட்ட ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகளுக்கும், மானாமதுரை ரயில்நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் பொழுது ேபாக்க சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பூங்காவில் சறுக்குதளம், பார் கம்பிகள், ஊஞ்சல், நடைபயிற்சி பாதையுடன் மலர்ச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2011க்கு பிறகு இங்கிருந்த விளையாட்டு சாதனங்கள் சேதமானது. அதன்பின் பூங்காவில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. மேலும் உடைந்த நிலையில் இருந்த விளையாட்டு சாதனங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளும், ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கும் பொழுது போக்க வழியின்றி தவித்து வருகின்றனர். இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ‘‘மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். தொலைதூரம் செல்லும் ரயில்களுக்கு காத்திருக்கும் பயணிகளின் குழந்தைகளுக்கும், மானாமதுரை ரயில்நிலையத்தில் பணி செய்யும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் பொழுது ேபாக்க சிறுவர்பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த பூங்கா அகற்றப்பட்ட நிலையில் ரயில்வே தொழிலாளர்களின் குழந்தைகளும், ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கும் பொழுது போக்க வழியின்றி தவித்து வருகின்றனர். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் இந்த பூங்காவை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்’’ என்றார்.

The post மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும் சிறுவர் பூங்கா வருமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Manamadurai railway station ,Manamadurai ,
× RELATED பஸ் விபத்தில் 9 பேர் காயம்